ஏட்டு ரேவதியிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றபோது நடந்தது என்னென்ன?

சாத்தான்குளம் இரட்டைக்கொலை நடந்தபோது ஏட்டு ரேவதியிடம் வாக்குமூலம் பெற்றது தொடர்பான விவரங்களை, மதுரை கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு தெரிவித்தார்.

Update: 2022-07-22 21:09 GMT

சாத்தான்குளம் இரட்டைக்கொலை நடந்தபோது ஏட்டு ரேவதியிடம் வாக்குமூலம் பெற்றது தொடர்பான விவரங்களை, மதுரை கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு தெரிவித்தார்.

இரட்டைக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் போலீசார் விசாரணைக்கு அழைத்துசென்றனர். போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களை தாக்கியதில் படுகாயம் அடைந்து இருவரும் அடுத்தடுத்து இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்துசி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 போலீசார் கைதானார்கள். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மாஜிஸ்திரேட்டு சாட்சியம்

இந்த வழக்கு நேற்று நீதிபதி நாகலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கைதான 9 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சாத்தான்குளம் சம்பவம் நடந்தபோது, சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் பணியாற்றிய ஏட்டு ரேவதியிடம் ரகசிய வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட்டு சக்திவேல் பெற்றிருந்தார். அவர் நேற்று மதுரை கோர்ட்டில் ஆஜரானார்.

ஏட்டு ரேவதியிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றது சம்பந்தமான தகவல்களை சாட்சியமாக விளக்கம் அளித்தார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்