சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

Update: 2024-04-26 10:32 GMT

சென்னை,

தமிழகம் முழுவதும் சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் எனவும் சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் துவங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 2018ம் ஆண்டு தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணி குறித்து அவ்வப்போது அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் நிபுணர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளவும் தமிழக அரசுக்கு அனுமதி அளித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் இந்த வழக்கு விசாரணை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்