மேற்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
வந்தவாசியில் மேற்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
வந்தவாசி
வந்தவாசி மேற்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழுக் கூட்டம் வந்தவாசியில் நடந்தது. வந்தவாசி மேற்கு ஒன்றியத் தலைவர் ந.நவநிதி தலைமை தாங்கினார்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் பி.பாஸ்கரன், மாவட்ட செயலாளர் வி.குருலிங்கம், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.ஜி.துரை நாடார், மாவட்ட பொதுச் செயலாளர் முத்துசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொருளாளர் பத்ரி நாராயணன் வரவேற்றார்.
மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் பாஸ்கரன் கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
கூட்டத்தில் தெள்ளூரில் சேதமடைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை புனரமைத்து தர வேண்டும். வெண்குன்றம் தவளகிரீஸ்வரர் மலைக்கு கிரிவலப்பாதை அமைத்து தர வேண்டும்.
கீழ்க்குவளைவேடு கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஏற்படுத்த வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து ஒரு மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் வாங்குவதை தடுக்க வேண்டும்.
கொடநல்லூரில் சேதமடைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைக்க வேண்டும். இளங்காடு கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியை தடை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இ்தில் நகர தலைவர் சுரேஷ், ஒன்றிய பொத செயலாளர்கள் ஆறுமுகம், மணிகண்டன், ஒன்றிய துணைத் தலைவர்கள் பி.ஏ.பெருமாள், வி.வடிவேல், ஈ.சக்திவேல் ஈ.ஜெகநாதன், எஸ்.வள்ளியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.