மேற்குவங்காள பெண் உரிமையாளர் கைது; 3 இளம்பெண்கள் மீட்பு
மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்தியதாக மேற்கு வங்காள பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மேலும் அங்கு இருந்து 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்தியதாக மேற்கு வங்காள பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மேலும் அங்கு இருந்து 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
விபசாரம்
திருச்சி கரூர் பை-பாஸ் சாலையில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சி மாநகர விபசாரதடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு சென்னை, வேலூரை சேர்ந்த 3 இளம் பெண்களை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 இளம்பெண்களையும் மீட்ட போலீசார், மசாஜ் சென்டர் உரிமையாளரான மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த நீரு (39) என்ற பெண்ணை கைது செய்தனர்.
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
*திருச்சி இ.பி.ரோடு பகுதியில் உள்ள ஒரு தியேட்டர் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றதாக வேதாத்திரி நகரை சேர்ந்த பழனிச்சாமி (48) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கேரளா லாட்டரி சீட்டு எண்கள் எழுதப்பட்ட துண்டு சீட்டுகள் 10 மற்றும் லாட்டரி சீட்டு விற்ற பணம் ரூ.150 பறிமுதல் செய்யப்பட்டது.
லாரி பறிமுதல்
*துவரங்குறிச்சி அருகே உள்ள அதிகாரம் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் அனுமதியின்றி செம்மண் அள்ளுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, செம்மண் கடத்தியவர்கள் போலீசாரை கண்டதும் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு இருந்த டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.