மத்திய அரசின் நலத்திட்ட விழிப்புணர்வு முகாம்
மத்திய அரசின் நலத்திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
ராமநாதபுரம்
ராமநாதபுரம் முகமது சதக் ஹமீது மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மத்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சக மக்கள் தொடர்பகம் சார்பில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை, மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட டெல்லி மேல்சபை எம்.பி. தர்மர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் மீரா வரவேற்றார். தொழில்நுட்ப உதவியாளர் சந்திரசேகரன் விழாவின் நோக்கம் குறித்து கூறினார்.
ராமநாதபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் விசுபாவதி, மாவட்ட சமூகநல அலுவலர் தேன்மொழி, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் ராஜரத்தினம், வனத்துறை ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து சிறுதானியங்களின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு இசை நிகழ்ச்சி நடந்தது. சிறுதானியங்கள், சுற்றுச்சூழல் குறித்து மாணவிகள் சார்பில் கண்காட்சி நடத்தப்பட்டது. மேலும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தர்மர் எம்.பி. பரிசு சான்றிதழ் வழங்கினார். முடிவில் மக்கள் தொடர்பகம் ஜெயராஜ் நன்றி கூறினார்.