பேரையூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

பேரையூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

Update: 2022-10-10 20:47 GMT

பேரையூர், 

பேரையூர் தாலுகாவில் உள்ள டி.கல்லுப்பட்டி, சேடப்பட்டி ஒன்றியங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேரையூரில் நடந்தது. முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்ற முகாமில் நல உதவிக்காக 1,313 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.விழாவில் 220 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், தேசிய அடையாள அட்டை, பஸ்பாஸ், மற்றும் வாழ்வாதார உபகரணங்கள் உள்ளிட்ட நல உதவிகளை மதுரை எம்.பி. வெங்கடேசன் வழங்கினார். விழாவில் உசிலம்பட்டி கோட்டாட்சியர் சங்கரலிங்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர் ரவிச்சந்திரன், மகளிர் திட்ட இணை இயக்குனர் காளிதாஸ், தாசில்தார் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆசிக், சிவசங்கர நாராயணன், பேரையூர் பேரூராட்சி தலைவர் கே.கே. குருசாமி, துணைத்தலைவர் பாஸ்கர், உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்