நலவாரிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
கோபாலசமுத்திரத்தில் நலவாரிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சேரன்மாதேவி:
தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய அடையாள அட்டை பதிவு செய்தல் மற்றும் வழங்குதல் முகாம் கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. தொழிலாளர் நல வாரிய இணை ஆணையர் சுமதி தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையர் முருக பிரசன்னா முன்னிலை வகித்தார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார்.
கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் சிறப்புரை ஆற்றினார். முத்திரை ஆய்வாளர் விஸ்வநாதன், தொழிலாளர் துணை ஆய்வாளர் மாயாவதி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் வசந்தா, கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி, தன்னார்வ தொண்டர் பிரேமா ஆகியோர் கருத்துரை ஆற்றினர். வித்யா மங்கல் பவுண்டேசன் நிறுவனர் ராகுல் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 1,513 பேருக்கு அமைப்பு சாரா தொழிலாளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.