அரூரில் தி.மு.க. மருத்துவ அணி சார்பில் நல உதவிகள் வழங்கும் விழா
அரூரில் தி.மு.க. மருத்துவ அணி சார்பில் நல உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
அரூர்:
அரூர் முருகர் கோவில் தெருவில் மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, நல உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி கலந்து கொண்டு ஏழை-எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் பல்வேறு நல உதவிகளை வழங்கினார். இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் சூர்யா தனபால், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் ஏ.சி.மோகன், பொறுப்பாளர்கள் சவுந்தரராசு, முல்லை ரவி, தங்கமணி, சென்னகிருஷ்ணன், தேசிங்குராஜன், விண்ணரசன், மகாலட்சுமி, தமிழழகன், சி.எம்.சேகர், ராணிமுத்து, செந்தாமரை கண்ணன், அல்லிமுத்து, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.