மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.10½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.10½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
கொல்லுமாங்குடி கிராமத்தில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.10½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்
மக்கள் நேர்காணல் முகாம்
நன்னிலம் தாலுகா கொல்லுமாங்குடி கிராமத்தில் 1.பில்லூர், கொல்லுமாங்குடி, கடுவங்குடி ஆகிய கிராமங்களுக்கான மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமிற்கு கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். முகாமில் 179 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 112 மனுக்கள் ஏற்கப்பட்டது.
முகாமில் வருவாய்த்துறையின் சார்பில் 24 பேருக்கு முதியோர் ஓய்வூதியம், இதர ஓய்வூதியதிற்கான ஆணையும், 34 பேருக்கு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனைக்கான பட்டாவும், 3 பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையும், 98 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 2 பேருக்கு பேட்டரியால் இயங்கும் மருந்து தெளிப்பான் கருவியும், 2 பேருக்கு தார்பாய்களும், 2 பேருக்கு பருத்தி நூண்ணூட்டமும், 2 பேருக்கு உயிர் உரமும், 2 பேருக்கு உளுந்து விதையும் என மொத்த 169 பேருக்கு ரூ.10 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
உறுதுணையாக இருக்கிறது
பின்னர் கலெக்டர் சாருஸ்ரீ பேசுகையில், மக்கள் நேர்காணல் முகாமானது ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு தாலுகா வாரியாக தேர்வு செய்யப்பட்ட கிராமத்தில் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் நேர்காணல் முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் நேர்காணல் முகாமில் மக்களின் இருப்பிடத்திற்கே சென்று துறைச்சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டுவரும் நலத்திட்டங்கள் தொடர்பாக எடுத்துரைக்கின்றனர்.
பொதுமக்களிடம் அரசின் நலதிட்டங்களை கொண்டு சேர்ப்பதற்கு இந்த முகாம் மிகவும் உறுதுணையாக இருக்கிறது என்றார்.
இதில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, தனிதுணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லதா, மாவட்ட கலெக்டரிரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலசந்தர், தாசில்தார் ஜகதீசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உதுமான், ஒன்றியக்குழு உறுப்பினர் கணபதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரகாஷ் (பில்லூர்), வெங்கடேசன் (கடுவங்குடி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.