நூலகத்துக்கு நலத்திட்ட உதவி
செங்கோட்டை நகராட்சி சார்பில் நூலகத்துக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை நூலகத்திற்கு வாசகர் வட்டத்தின் சார்பாக வாசகர் வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் ரூ.33 ஆயிரத்தை செங்கோட்டை நகராட்சியில் செலுத்தினார். அதன் பயனாக நகராட்சி மூலம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த தொகைக்கு பார்கோடு ஸ்கேனர், பார்கோடு பிரிண்டர், சி.சி.டிவி கேமரா, ப்ரொஜெக்டர், வேக்கம் கிளீனர் போன்ற நவீன பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கணினி வசதியுடன் வாசர்களுக்கு எளிய முறையில் புத்தகங்கள் எடுத்துக் கொடுக்கப்படும். இதனால் நூலகம் நவீனமயமாகிறது.
நகராட்சியின் மூலம் செங்கோட்டை நூலகத்திற்கு நவீன பொருட்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் ்ராமலட்சுமி முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் ஆதிமூலம், இணைச் செயலாளர் செண்பக குற்றாலம். பொருளாளர் தண்டமிழ்தாசன் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் நூலகர் ராமசாமி நன்றி கூறினார்.