திருவேங்கிடபுரத்தில் கிராமசபை கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவேங்கிடபுரத்தில் கிராமசபை கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

Update: 2022-10-03 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்;

கருங்குளம் யூனியன் கீழ வல்லநாடு பஞ்சாயத்து திருவேங்கிடபுரம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டார்.

கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் அறிக்கை வாசித்தாா். பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோரிக்கை வைத்தனர். அதற்கு மாவட்ட கலெக்டர், அமைச்சர் மற்றும் சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் பதில் அளித்தனர். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

தாசில்தார் ராதாகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரமேஷ், கருங்குளம் யூனியன் தலைவர் கோமதி ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, பாக்கிய லீலா, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்