மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி

த.ம.மு.க. சார்பில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

Update: 2023-07-31 18:48 GMT

அம்பை:

1999-ம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நடத்திய அமைதி ஊர்வலத்தில் காவல் துறையினர் நடத்திய தடியடியில் தாமிரபரணி ஆற்றில் 17 பேர் உயிரிழந்தனர். இதன் 24-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு நெல்லை மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அரிசி, பருப்பு மளிகைபொருட்கள், தையல் எந்திரங்கள், மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அவற்றை மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன், மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவந்தி முத்துப்பாண்டி, மேலப்பாளையம் பகுதி செயலாளர் டிக்முத்து, மேலப்பாளையம் இணை செயலாளர் முருகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்