வேளாங்கண்ணி:
கீழையூர் வட்டாரம், திருக்குவளையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில், நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் தெளிப்பான்களை வழங்கினார். முன்னதாக, வேளாண் துணை இயக்குனர் வெங்கடேசன் விவசாயிகளுக்கான வேளாண் திட்டங்களை எடுத்துக் கூறினார். மேலும் கால்நடைத் துறை, கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு துறை சார்ந்த திட்டங்களை எடுத்து கூறினர். இதில், ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் மற்றும் விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்குவளை வேளாண்மை துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.