கடலூரில்807 பேருக்கு ரூ.1½ கோடியில் நலத்திட்ட உதவிகள்அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் வழங்கினர்

கடலூரில் நடந்த விழாவில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் 807 பேருக்கு ரூ.1½ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Update: 2023-05-10 18:45 GMT


கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடலூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தொடர்ந்து தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை மலரை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட, அதனை அமைச்சர் சி.வெ.கணேசன் பெற்றுக் கொண்டார். இதையடுத்து 4 பேருக்கு பொதுநிவாரண நிதி, 579 பேருக்கு முதியோர் மற்றும் இதர உதவித்தொகை, 115 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 10 பேருக்கு வேளாண் கருவிகள், 10 பேருக்கு தையல் எந்திரம், 36 பேருக்கு சலவை பெட்டி மற்றும் இலவச தையல் எந்திரம், 20 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் என மொத்தம் 807 பேருக்கு ரூ.1 கோடியே 50 லட்சத்து 17 ஆயிரத்து 172 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், சபா.ராஜேந்திரன், மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்