மனுநீதி நாள் முகாமில் 56 பேருக்கு நலத்திட்ட உதவி

டி.பி.பாளையம் ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 56 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

Update: 2022-06-16 14:02 GMT


குடியாத்தம் தாலுகா டி.பி.பாளையம் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு குடியாத்தம் தாசில்தார் லலிதா தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நெடுமாறன், ஊராட்சிமன்ற தலைவர்கள் விமலா, கனகரத்தினம், ஒன்றியக் குழு உறுப்பினர் மஞ்சுநாதன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.சேகர், ஏ.ஜே.பத்ரிநாத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜனார்த்தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தாசில்தார் வேல் முருகன் வரவேற்றார்.

வேளாண்மை உதவி இயக்குனர் உமாசங்கர், வட்டார மருத்துவ அலுவலர் விமல் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் திட்ட விளக்க உரை ஆற்றினார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் சி.பேபிஇந்திரா, குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு 56 பயனாளிகளுக்கு வேளாண் கருவிகள், சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை, பட்டா உள்ளிட்டவைகளை வழங்கினார்கள்.

வருவாய் ஆய்வாளர் மஞ்சுநாத், கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் உள்பட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், வருவாய்த்துறையினர கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்