ராசிபுரம்
ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஜல்ஜீவன் மிஷன் புதிய திட்டப் பணிக்கு நிர்வாக அனுமதி அமைச்சர் வழங்கினார். மேலும் விபத்து நிவாரண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல், தாட்கோ பயனாளிகளுக்கு டிராக்டர் வாகனம் வாங்க கடன் உதவி, பயிர்க் கடன், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்ட கடன் உதவி, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் 538 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராமசாமி, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், வேளாண்மை துறை இணை இயக்குனர் துரைசாமி கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் நடராஜன் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.