சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 52 பேருக்கு நலத்திட்ட உதவி

நரியனேரி கிராமத்தில் நடந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 52 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

Update: 2022-06-15 13:44 GMT

திருப்பத்தூர்

கந்திலி ஒன்றிய வருவாய் கிராமங்களான் நரியனேரி, பெரியகரம் கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நரியனேரி கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மேகலாமுருகேசன் தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர் மகாராணி வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் சுமித்ரா மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ். அன்பழகன் கலந்துகொண்டு முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், விவசாய கருவிகள், விதவை உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு என 52 பேருக்கு ரூ.5 லட்சத்து 29 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்கள்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், கந்திலி ஒன்றியக்குழு தலைவர் திருமதி திருமுருகன், துணைத் தலைவர் மோகன்குமார், மாவட்ட கவுன்சிலர் கே.ஏ.குணசேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தணிகாசலம், கிராம நிர்வாக அலுவலர் சுந்தரேசன் உள்பட பலர் பேசினர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் மணிரத்தினம் நன்றி கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்