குலசேகரத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 23 பேருக்கு நலத்திட்ட உதவி
குலசேகரத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 23 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
குலசேகரம்,
குலசேகரத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 23 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நலத்திட்ட உதவி
குலசேகரம் செருப்பாலூர் அரசு பள்ளியில் 2-ம் கட்ட மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா தலைமை தாங்கி 23 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, விதவை உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் குலசேகரம் பேரூராட்சி தலைவி ஜெயந்தி ஜேம்ஸ் வரவேற்றார்.
சமூக பாதுகாப்புத்திட்ட அலுவலர் திருப்பதி, மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ஆகியோர் பேசினர். திருவட்டார் தாசில்தார் தினேஷ் சந்திரன் நன்றி கூறினார். இதில் வருவாய் ஆய்வாளர் அமுதா, கிராம நிர்வாக அலுவலர்கள் ரவி, அமுதா, குலசேகரம் பேரூராட்சி துணை தலைவர் ஜோஸ் எட்வர்ட் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.