ஜமாபந்தி நிறைவு நாளில் 174 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

சோளிங்கரில் ஜமாபந்தி நிறைவு நாளில் 174 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Update: 2022-05-28 18:38 GMT

சோளிங்கர்

சோளிங்கர் தாலுகாவில் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி தாலுகாவாக தரம் உயர்ந்தபின் முதல்முறையாக நடைபெற்றது. நிறைவு நாள் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார்.

வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, உதவி ஆணையர் (கலால்) சத்திய பிரசாத், கலெக்டர் அலுவலக மேலாளர் பாபு, ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் எஸ் எம் நாகராஜ், தாசில்தார் வெற்றி குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கணேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மக்கள் தொடர்பு அலுவலர் அசோக்குமார் வரவேற்றார்,

இதில் 54 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 22 ஆயிரத்து 370 மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டா, 25 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான சமூக பாதுகாப்பு திட்ட உதவி தொகைஉள்பட 174 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்து 12 ஆயிரத்து 242 ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்