1400 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

1400 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்

Update: 2023-07-03 18:45 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் கல்லல் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கல்லல் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் பூரணசங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லல் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குமார் வரவேற்றார்.

இதில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு 1400 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் நாராயணன், தொழிலதிபர் மணிகண்டன், கீழப்பட்டமங்கலம் ஊராட்சி தலைவர் பிரமிளா கார்த்திகேயன், மாவட்ட கவுன்சிலர் மஞ்சரி லட்சுமணன், பாண்டி, வெளியாரி காசி, இளைஞரணி துணை அமைப்பாளர் ராமராஜன், ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், கீழப்பட்டமங்கலம் தி.மு.க. கிளைச்செயலாளர் பிரவீன்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்