மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நாகையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

Update: 2023-05-30 18:45 GMT

நாகையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 250 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு மூன்று சக்கர சைக்கிளையும், 5 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் ெபாருத்தப்பட்ட ஸ்கூட்டரையும், 5 பயனாளிகளுக்கு கைபேசி என மொத்தம் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 93 ஆயிரத்து 945 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, உதவி கலெக்டர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்