ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் வழங்கினார்

சிவகங்கையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஆஷாஅஜீத் ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Update: 2023-08-15 18:57 GMT

சிவகங்கையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஆஷாஅஜீத் ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

சுதந்திர தின விழா

சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழா நடைபெறும் மைதானத்திற்கு வந்த மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத்தை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் வரவேற்று அழைத்து வந்தார். கலெக்டர் தேசிய கொடியை ஏற்றினார். கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஜீப்பில் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டனர். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கலெக்டர் கவுரவித்தார். கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் வெண்புறாக்களை பறக்க விட்டனர்.

பின்னர் நடந்த விழாவில் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 70 போலீசாருக்கும் மற்றும் தாசில்தார்கள் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 285 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.

நலத்திட்ட உதவி

தொடர்ந்து 22 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே, 67 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். பின்னர், பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பாட்டம், யோகா மற்றும் கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணிபாஸ்கரன், வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மருத்துவகல்லுாரி முதல்வர் சத்தியபாமா, மருத்துவ அலுவலர் மகேந்திரன், துணை வட்டார மருத்துவ அலுவலர் முகமது ரபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா பள்ளி செயலர் சேகா் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன், சிவகங்கை நகரசபை தலைவா் துரைஆனந்த், நல்லாசிரியர் கண்ணப்பன், வக்கீல் ராம்பிரபாகர், யுவராஜன், தலைமையாசிரியர் தியாகராஜன், உடற்கல்வி ஆசிரியர் தடியப்பன் சரவணன், பொறுப்பாசிரியர்கள் சந்திரசேகர், மகரஜோதி, சக்திவேல், ஜெயமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை தாய் இல்லத்தில் சீமை பட்டாளங்கள் சார்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாற்றுத்திறனாளி வாரிய உறுப்பினர் புஷ்பராஜ் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். விழாவில் வாணியங்குடி ஊராட்சித்தலைவர் சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் நல்லாசிரியர் கண்ணப்பன், வாசகர் வட்டத் தலைவர் அன்புத்துரை, மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தாய் இல்ல நிர்வாகி தனலட்சுமி நன்றி கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்