வத்தல்மலை கிராம மக்களுக்கு ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள்

வத்தல்மலை மலை கிராம மக்களுக்கு ரூ.2 கோடியே 15 லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

Update: 2022-10-12 19:45 GMT

வத்தல்மலை மலை கிராம மக்களுக்கு ரூ.2 கோடியே 15 லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

தர்மபுரி அருகே வத்தல்மலையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். டாக்டர் செந்தில்குமார் எம்.பி., கோவிந்தசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப்- கலெக்டர் சித்ரா விஜயன் வரவேற்று பேசினார். முகாமில் பல்வேறு துறைகளில் சார்பில் 247 பேருக்கு ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்புள்ள அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

மலைகிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்விற்காகவும் அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியினை மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயலாற்றி வருகிறது. மக்கள் அத்தகைய திட்டங்களை பெற்று தங்களின் வாழ்க்கை தரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தி கொள்ள முன்வர வேண்டும்.

நடவடிக்கை

இந்த மக்கள் தொடர்புத்திட்ட முகாமினை முன்னிட்டு ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு இன்றைய தினம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும், பொதுமக்கள் அளிக்கின்ற அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் துறை வாரியாக உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தகுதியான மனுக்கள் மீது உரிய தீர்வு விரைந்து காணப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாகபல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.

முகாமில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் யசோதா மதிவாணன், ஒன்றியக் குழுத் தலைவர் நீலாபுரம் செல்வம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பூங்கொடி சேகர், கொண்டகரஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் தங்கராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சுவாமிநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் கதிர்சங்கர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன், தாசில்தார் ராஜராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், தனபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்