மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
திருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.
திருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.
மருத்துவ முகாம்
திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமினை கலெக்டர் சாருஸ்ரீ-எம்.எல்.ஏ. பூண்டி கே.கலைவாணன் தொடங்கி வைத்தனர்.
திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருவாரூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
நூற்றாண்டு விழா
மாற்றுத்திறனாளிகள் துறை என்ற பெயரை மாற்றி இத்துறையை பெருமையடைய செய்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. அவருடைய நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நடத்தப்படுவதற்கு காரணம் அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளும் ஒரே இடத்தில் செய்திட ஏதுவாக அமைந்துள்ளது.
ஒரு குடும்பத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற்று வந்தாலும் அந்த குடும்பத்தில் உள்ள மகளிரும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நலத்திட்ட உதவிகள்
இதில் 3 பேருக்கு நவீன செயற்கைகால், நலவாரியாத்தின் மூலம் 3 பேருக்கு கல்வி உதவித்தொகை, 7 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் 2 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை ஆகிய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ, பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
இதில் திருவாரூர் உதவி கலெக்டர் சங்கீதா, இணை இயக்குனர் (சுகாதாரபணிகள்) செல்வகுமார், முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மருத்துவகல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, மாற்றுத்திறனாளிகள் முடநீக்கியல் வல்லுனர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.