நலத்திட்ட உதவிகள் முகாம்

கொத்தங்குடி ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் முகாம் நிவேதா முருகன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

Update: 2023-01-05 18:45 GMT

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சித்துறையுடன் பிற துறைகளும் ஒருங்கிணைந்த நலத்திட்ட உதவிகள் முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அமராவதி ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஜயாராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் கோபி வரவேற்றார். இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார். முகாமில் தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) சண்முகம், ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், தி.மு.க. குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் எழுமகளூர் ராஜா, சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்