பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜீத் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2023-05-29 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜீத் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

குறைத்தீர்க்கும் கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 360 மனுக்கள் பெறப்பட்டன.

அந்த மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில் 8 பயனாளிகளுக்கு ரூ.56,466 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரத்தினவேல், சமூகப்பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்