கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டிஏழை, எளியோருக்கு ரூ.6½ லட்சம் நல உதவிகள்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

Update: 2023-08-16 19:30 GMT

தர்மபுரி:

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நல்லம்பள்ளி அருகே மாதேமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட குட்டூர் கிராமத்தில், தி.மு.க மாவட்ட மகளிர் அணி சார்பில் ஏழை எளியோர் 200 பேருக்கு ரூ.6.50 லட்சம் மதிப்பிலான பல்வேறு நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பி.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சண்முகம் வரவேற்றார். இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தையல் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை வழங்கி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.க்கள் எம்.ஜி.சேகர், தாமரைச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான்மாது, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ்.வெங்கடேஷ்வரன், தலைமை செயற்குழு உறுப்பினர் தர்மசெல்வன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட நிர்வாகிகள் பழனிசாமி, துரைசாமி, ஆறுமுகம், பாளை அன்பழகன், தடங்கம் இளையசங்கர், கவுதம், சரவணன், பன்னீர்செல்வம், நிர்வாகிகள் கலைவாணி, சோனியா, கண்ணம்மா, ராஜேஸ்வரி, பத்மா, மணிமேகலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர், முடிவில் கிளை செயலாளர் சேகர்முத்துலட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்