வெல்டிங் பட்டறை உரிமையாளர் சாவு

கன்டெய்னர் லாரி மோதியதில் காயம் அடைந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் இறந்தார்.

Update: 2022-11-12 18:30 GMT

ஆம்பூர்

கன்டெய்னர் லாரி மோதியதில் காயம் அடைந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் இறந்தார்.

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் நேரு (வயது 56). வெல்டிங் பட்டறை நடத்தி வந்த இவர் கடந்த மாதம் 18-ந் தேதி ேதி பேரணாம்பட்டு சாலையில் மோட்டார்சைக்கிளில் ஒருவருடன் சென்றபோது கண்டெய்னர் லாரி மேைாதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இவருடன் சென்றவர் பலியானார். காயம் அடைந்த நேருவை அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நேரு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்