வெல்டிங் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி அருகே வெல்டிங் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே வெல்டிங் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெல்டிங் தொழிலாளி
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள வீரநாயக்கன்தட்டு வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருடைய மகன் ராமச்சந்திரன் (வயது 28). இவர் ஐ.டி.ஐ. படித்து, வெல்டிங் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு கடந்த 2 மாதங்களாக மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் அவரது தாய் வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டி இருந்தாக கூறப்படுகிறது.
தூக்கில் தொங்கினார்
நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த ராமச்சந்திரனின் அண்ணன் சக்திவேல், வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அங்கு ராமச்சந்திரன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டார்.
பின்னர் அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராமச்சந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மூக்கன் விசாரணை நடத்தி வருகிறார்.