வெல்டிங் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
திண்டுக்கல்லில் வெல்டிங் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல் மருதாணிக்குளம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 25). திண்டுக்கல்லில் உள்ள ஒரு கடையில் வெல்டிங் வேலை செய்து வந்தார். பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டதால் இவர் தனியாக வசித்து வந்தார். இதனால் விரக்தியில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.