நெல்லையில் மகளிர் போலீசாருக்கு வரவேற்பு

சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் மகளிர் போலீசாரின் சைக்கிள் பயணத்துக்கு நெல்லையில் வரவேற்பு அளித்தனர்.

Update: 2023-03-26 20:23 GMT

சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் மகளிர் போலீசாரின் சைக்கிள் பயணத்துக்கு நெல்லையில் வரவேற்பு அளித்தனர்.

சைக்கிள் பயணம்

தமிழக போலீஸ் துறையில் மகளிர் போலீசார் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை மகளிர் போலீசாரின் சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார்கள். கடந்த 17-ந் தேதி சென்னையில் நடந்த விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் கன்னியாகுமரி செல்லும் வழியில் நேற்று மாலை சைக்கிள் பயண குழுவினர் நெல்லைக்கு வந்தனர். அவர்களுக்கு வி.எம்.சத்திரம் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் அனிதா மற்றும் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் சைக்கிள் பயணத்துக்கு பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சைக்கிள் பயணம் வந்த குழுவினர், குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

குமரி நோக்கி...

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு மீண்டும் மகளிர் போலீசார் கன்னியாகுமரி நோக்கி சைக்கிள் பயணத்தை தொடர்ந்தனர். அந்தப் பயணத்தை துணை கமிஷனர்கள் கொடியை அசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பயணத்தினர் மூன்றடைப்பில் இரவு பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று (திங்கட்கிழமை) காலையில் அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி செல்கின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்