தமிழக கவர்னருக்கு வரவேற்பு
தூத்துக்குடியில் தமிழக கவர்னருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் ஒண்டிவீரன் தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தூத்துக்குடி விமான நிலையம் வந்தனர். அவர்களை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வரவேற்றார். முன்னதாக காவல்துறை சார்பில் நடந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.