அமைச்சர் கீதாஜீவனுக்கு வரவேற்பு

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-10-01 18:45 GMT

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவருக்கு தூத்துக்குடி மாநகர எல்லையான எப்.சி.ஐ. குடோன் அருகே மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் மேளதாளத்துடன் தி.மு.கவினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இதில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டு கலந்துகொண்டு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் கலைஞர் அரங்கத்தில் உள்ள முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உருவச்சிலைக்கும், போல்பேட்டையில் உள்ள முன்னாள் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

நிகழ்ச்சியில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், சுகாதாரக்குழு தலைவர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்