இந்திய தொழிற்சங்க மையத்தினருக்கு வரவேற்பு

கொள்ளிடம் வந்த இந்திய தொழிற்சங்க மையத்தினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது

Update: 2023-05-23 18:45 GMT

கொள்ளிடம்:

இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் அங்கன்வாடி மற்றும் மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்ட ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பருவ கால ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து தரைக்கடை வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டின் ஏழு முனைகளிலிருந்து இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் நடை பயணம் நடைபெற்று வருகிறது. கடந்த 20-ந் தேதி ஆரம்பித்து அனைத்து நடைபயணமும் வரும் 30-ந் தேதி திருச்சியில் சென்று முடிவடைகிறது. அதில் ஒரு பகுதி நடை பயண குழுவினர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வழியே வந்து மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடத்திற்கு நேற்று வந்தனர். மாநில பொதுச் செயலாளர் திருச்செல்வம் தலைமையில் பயணக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயபால், அரியலூர் மாவட்ட செயலாளர் துரைசாமி உள்ளிட்டோர் பயண குழுவில் கோரிக்கையை வலியுறுத்தி பிரசாரம் செய்து வந்து கொண்டிருந்தனர். இந்த பயண குழுவினருக்கு கொள்ளிடம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் கேசவன் தலைமையில் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்