திண்டுக்கல்-மதுரை ெரயிலுக்கு சோழவந்தான் ரெயில் நிலையத்தில் வெற்றிலை மாலை அணிவித்து வரவேற்பு

திண்டுக்கல்-மதுரை ெரயிலுக்கு சோழவந்தான் ரெயில் நிலையத்தில் வெற்றிலை மாலை அணிவித்து வரவேற்பு

Update: 2022-07-11 19:03 GMT

சோழவந்தான்

மதுரை-திண்டுக்கல், திண்டுக்கல்-மதுரை ெரயில் கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்டது. கடந்த மாதங்களில் நிறுத்தப்பட்ட ெரயில்கள் தொடங்கப்பட்டது. மதுரை-திண்டுக்கல், திண்டுக்கல்-மதுரை ெரயில் இயக்கவில்லை. இதுகுறித்து சோழவந்தான் ெரயில் பயணிகள் நலச்சங்கம் மதுரை கோட்ட மேலாளரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை மதுரையில் இருந்து திண்டுக்கல் சென்றது. அதே ெரயில் நேற்று காலை திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு இயங்க தொடங்கியது. இந்த ெரயில் சோழவந்தான் வந்தபோது பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமையில் ெரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் வக்கீல் ராஜேந்திரன், வார்டு கவுன்சிலர்கள் வக்கீல் சத்தியபிரகாஷ், குருசாமி, செந்தில்வேல் ஆகியோர் முன்னிலையில் ெரயில் பயணிகள் நல சங்கத்தின் நிர்வாகிகள் திண்டுக்கல்லில் இருந்து மதுரை வந்த ெரயிலை வரவேற்று ெரயிலுக்கு வெற்றிலை மாலை அணிவித்தனர். இதைத்தொடர்ந்து என்ஜின் டிரைவர்கள், ெரயில் இயக்கக் கூடிய அலுவலர், ெரயில் நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து அனைவருக்கும் லட்டு வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்