முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாணியம்பாடியில் வரவேற்பு ஏற்பாடு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாணியம்பாடியில் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதியில் போலீஸ்சூப்பிரண்டு ஆய்வு.

Update: 2022-06-26 18:21 GMT

திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 29-ந் தேதி காலை 9 மணியளவில் ஆம்பூரில் இருந்து புறப்பட்டு வாணியம்பாடி வழியாக திருப்பத்தூர் செல்கிறார். அவருக்கு வாணியம்பாடி பைபாஸ் ரோட்டில் உள்ள கூடுதல் பஸ் நிலையம் அருகே  வரவேற்பு அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜன், ஆலங்காயம் இன்ஸ்பெக்டர் பழனி, தாலுகா இன்ஸ்பெக்டர் அருண் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்