பெங்களூரு- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயிலுக்கு வரவேற்பு

திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு வந்த பெங்களூரு- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2023-03-26 18:45 GMT

கொரடாச்சேரி:

திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு வந்த பெங்களூரு- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிறப்பு ரெயில்கள்

அனேக மக்கள் பயணிக்க முதல் விருப்பமாக தேர்வு செய்வது ரெயில் பயணத்தை மட்டுமே. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ெரயில் பயணத்தை தான் அதிகம் விரும்புகின்றனர். அந்த அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள ரெயில்வே கோட்டங்கள் கோடை காலத்தை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்குகின்றன.

இதன் மூலம் கூட்ட நெரிசலை குறைக்கவும் மக்கள் இலகுவாக பயணிக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றன. அந்த அடிப்படையில் தென்மேற்கு ரெயில்வே பெங்களூருவில் இருந்து சனிக்கிழமைகளில் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்குகிறது.

திருவாரூரில் வரவேற்பு

பெங்களூருவில் காலை 7:50 மணிக்கு (வண்டி எண் 06547) புறப்பட்டு சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக வேளாங்கண்ணிக்கு இரவு 8:30 மணிக்கு வந்தடைகிறது. மறுமார்கத்தில் வேளாங்கண்ணியில் இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. பெங்களூருவில் இருந்து முதல் முறையாக திருவாரூர் வந்த இந்த ரெயிலுக்கு திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்போர் சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.

ரெயிலின் ஓட்டுநர்களுக்கும், ரெயில் மேலாளருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டது. பயணிகளுக்கு இனிப்பும் வழங்கினர். நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி கோட்ட ரெயில் உபயோகிப்போர் ஆலோசனை குழு உறுப்பினர் பாஸ்கரன், வணிக ஆய்வாளர் உதய சுகுமாரன், நிலைய மேலாளர் குமரன், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்