அமர்நாத் யாத்திரை சென்று திரும்பியவர்களுக்கு வரவேற்பு
ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் அமர்நாத் யாத்திரை சென்று திரும்பியவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பனைக்குளம்.
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் மெயின் சாலையில் ஸ்ரீ வல்லபை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினந்தோறும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் தினமும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதைத்தொடர்ந்து வல்லபை அய்யப்பன் கோவிலில் இருந்து அமர்நாத் யாத்திரை செல்வதற்காக கடந்த 1-ந்தேதி ேகாவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. கோபால் சுவாமி தலைமையில் காசி, அமர்நாத் யாத்திரை சென்று விட்டு சுவாமிகள் நேற்று ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலுக்கு வந்தனர். அவர்களை கோவில் தலைமை குருசாமி ஆர்.எஸ். மோகன் சாமி தலைமையில் அய்யப்ப பக்தர்கள் இணைந்து வரவேற்றனர். இதைத்தொடர்ந்து அங்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றன.