வத்தலக்குண்டுவில் அண்ணாமலைக்கு பா.ஜ.க.வினர் வரவேற்பு

வத்தலக்குண்டுவில் அண்ணாமலைக்கு பா.ஜ.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Update: 2023-03-07 21:00 GMT

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பதற்காக பெரியகுளத்துக்கு சென்றார். இதற்காக அவர் சென்னையில் இருந்து வத்தலக்குண்டு வழியாக பெரியகுளத்துக்கு காரில் சென்றார். முன்னதாக வத்தலக்குண்டுவுக்கு வந்த அண்ணாமலைக்கு, பா.ஜ.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதில், கட்சியின் கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன், மாவட்ட செயலாளர்கள் கோவிந்தராஜ், அழகுமணி, ஒன்றிய தலைவர்கள் செந்தில்குமார், அர்ஜூனபாண்டியன், நகர தலைவர் மருது உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்