நாகர்கோவில்-வேளாங்கண்ணி இடையே ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரெயில்

நாகர்கோவில்-வேளாங்கண்ணி இடையே ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

Update: 2023-06-09 19:20 GMT

நாகர்கோவில்-வேளாங்கண்ணி இடையே ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

தேவாலய திருவிழா

வேளாங்கண்ணி மாதா தேவாலய திருவிழா வருகிற ஆகஸ்டு மாதம் இறுதியில் நடைபெறவுள்ளது. இதனால் பக்தர்களின் வருகை அதிகரிக்கும். கூட்டநெரிசலை தவிர்க்க பக்தர்கள் வசதிக்காக நாகர்கோவில்-வேளாங்கண்ணி இடையே ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி,

நாகர்கோவில்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் (எண்:06037) வருகிற ஆகஸ்டு மாதம் 5, 12, 19, 26 மற்றும் செப்டம்பர் மாதம் 2, 9, 16, 23, 30-ந்தேதி ஆகிய நாட்களில் சனிக்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11.40 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

இதுபோல் வேளாங்கண்ணி-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் (எண்:06038) வருகிற ஆகஸ்டு மாதம் 6, 13, 20, 27 மற்றும் செப்டம்பர் மாதம் 3, 10, 17, 24, மற்றும் அக்டோபர் மாதம் 1-ந்தேதி ஆகிய நாட்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வேளாங்கண்ணியில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.45 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

பொது பெட்டிகள்

இந்த வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் இரண்டு அடுக்கு ஏசி பெட்டிகள், 3 அடுக்கு ஏசி பெட்டிகள் தலா 2, படுக்கை வசதி பெட்டிகள் 12, பொது பெட்டிகள் 4 இணைக்கப்பட்டு இருக்கும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்