ராமநாதபுரம்-செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு கட்டண ரெயில்

ராமநாதபுரம்-செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்பட உள்ளது.

Update: 2023-09-11 21:08 GMT


தென்மத்திய ரெயில்வே சார்பில் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்திர சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை புதன்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்தும், மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்தும் இயக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த ரெயிலின் சேவை தற்போது பயணிகளின் வசதிக்காக இந்த மாதம் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, செகந்திராபாத்தில் இருந்து புறப்படும் சிறப்புக்கட்டண ரெயில் வருகிற 27-ந் தேதி வரை புதன்கிழமை தோறும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் ராமேசுவரத்தில் இருந்து வருகிற 29-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படும். அதன்படி, செகந்திராபாத்-ராமநாதபுரம் சிறப்பு ரெயில் (வ.எண்.07695) இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.45 மணிக்கு ராமநாதபுரம் வந்தடையும். மறுமார்க்கத்தில் ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு ரெயில் (வ.எண்.07696) ராமநாதபுரத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

ரெயில்கள் நளகொண்டா, மிரியால்குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, கவளி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் 3 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்