உடுமலை நகராட்சி வாரச்சந்தை சேறும், சகதியுமாக உள்ளதால் வாரச்சந்தையை மேம்படுத்துவதற்கான பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை நகராட்சி வாரச்சந்தை சேறும், சகதியுமாக உள்ளதால் வாரச்சந்தையை மேம்படுத்துவதற்கான பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2022-11-07 12:52 GMT

உடுமலை

உடுமலை நகராட்சி வாரச்சந்தை சேறும், சகதியுமாக உள்ளதால் வாரச்சந்தையை மேம்படுத்துவதற்கான பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

நகராட்சி வாரச்சந்தை

உடுமலை ராஜேந்திரா சாலையில் நகராட்சி வாரச்சந்தை உள்ளது. இந்த வாரச்சந்தை, நகராட்சியில் ஏலம் எடுத்துள்ள குத்தகைதாரர் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை சந்தை கூடும். சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்வது வழக்கம். ஆனால் திங்கட்கிழமை கூடும் வாரச்சந்தையில் கட்டப்பட்டுள்ள கடைகள் பெரும்பாலும் பழுதடைந்து பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதனால் திங்கள் கிழமைகளில் இந்த பகுதியில் திறந்தவெளியில் காய்கறிகடைகள் செயல்படுகின்றன.

இந்த வாரச்சந்தை வளாகத்தின் ஒரு பகுதியில் உள்ள தினசரி சந்தையில் கடைகள் உள்ளன.அதையடுத்து காய்கறி கமிஷன் மண்டிகள் உள்ளன. நூற்றுக்கணக்கானவிவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை சரக்கு வாகனங்களில் தினசரி கமிஷன் மண்டிகளுக்கு கொண்டு வருகின்றனர்.அதை வாங்கி சரக்கு வாகனங்களில் கொண்டு செல்வதற்கு வியாபாரிகளும் வருகின்றனர். அதனால் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேம்பாட்டு பணிகள்

இந்த வாரச்சந்தையை மேம்படுத்துவதற்காக மட்டும் ரூ.6 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.இந்த நிதியின் மூலம் வாரச்சந்தை வளாகத்தில் 210கடைகளை கட்டதிட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் இந்த ஆண்டு (2022) தொடங்கப்பட்டுதற்போது நிறுத்தப்பட்டுவிட்டன.அதனால் கட்டிடப்பணிகள் நடந்து வந்த பகுதிகளுக்குள் தற்போதுசெடிகள் வளர்ந்துள்ளன.

தற்போது மழைபெய்து வருவதால் வாரச்சந்தை வளாகத்தில் ஆங்காங்கு மழைத்தண்ணீர் தேங்கியும், சேறு சகதியாகவும் உள்ளது. இதனால் நேற்று திறந்த வெளியில் காய்கறிகடைகளை வைக்க வந்திருந்த சிறு வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர். அதனால் காய்கறிகளை வாங்க வந்திருந்த பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர்.அத்துடன் அந்த இடத்திற்கு அருகே காய்கறி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.

உடுமலை நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் பாதியில் நின்றுள்ள மேம்பாட்டு பணிகளை மீண்டும் தொடங்கி பணிகளை துரிதப்படுத்த வேண்டும், அதுவரை மழைத்தண்ணீர் தேங்காத வகையிலும், சேறு சகதி ஏற்படாதவகையிலும், தற்காலிக தீர்வு காணும்வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்