சிங்கம்புணரியில் வாரச்சந்தை திறப்பு
சிங்கம்புணரியில் வாரச்சந்தையை காெணாலியில் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் வாரச்சந்தையை காெணாலியில் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
152 கடைகள்
சிங்கம்புணரி நகர் பகுதியில் பஸ் நிலையம் அருகில் வாரச்சந்தையில் ரூ.3 கோடி மதிப்பில் 152 கடைகள் கட்டப்பட்டு உள்ளது. சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு உள்ள வாரச்சந்தை கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத் தலைவர் இந்தியன் செந்தில் ஆகியோர் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது முன்னிலையில் சிங்கம்புணரி வாரச்சந்தை நுழைவாயிலில் குத்துவிளக்கு ஏற்றி முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் முகமது நிஷா, ஜெயசித்ரா லோக நாதன், சத்யா சத்தியமூர்த்தி, வள்ளி மனோகரன், ஜெய பாக்கியம், திருமாறன், மீனா, ஜெயக்குமார், தனசேகரி சோம சுந்தரம், அலாவுதீன், சங்கர், மணிசேகரன், செந்தில் கிருஷ்ணன், தாயுமானவன், ராமலட்சுமி ஞானி செந்தில், கக்கன் ராஜா, திவ்யா பிரேம், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், ஒன்றிய துணை செயலாளர் சிவபுரி சேகர், அவைத்தலைவர் சிவக்குமார், நகர் பொருளாளர் கதிர்வேல், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், பிரதிநிதி புகழேந்தி, ஜமாத்தலைவர் ராஜாமுகமது, தொழில் நுட்ப அணி அமுதன், மாணவர் துணை அமைப்பாளர் அருண், சாதிக், ஷியாம் குமார், சேவுகமூர்த்தி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தேவகோட்டை
தேவகோட்டை தெற்கு ஒன்றியம், கண்ணங்குடி ஒன்றியம், வடக்கு ஒன்றியம் சார்பில் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் (தெற்கு)நாகனி ரவி, கவுன்சிலர்கள் அங்கலான்கோட்டை பாண்டி, சருகணி கோட்டைச்சாமி, கடையனேந்தல் ஜான்சிராணி சூசை ராஜா, தேவகோட்டை (வடக்கு)ஒன்றிய செயலாளர் வக்கீல் பூபாலசிங்கம், கண்ணங்குடி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப் பாளர் விசாலயன்கோட்டை சரவணன், மாவட்ட பிரதிநிதி செட்டியா வயல் செந்தில்வேலு கலந்துகொண்டனர்.