முட்செடிகளை அகற்ற வேண்டும்

முட்செடிகளை அகற்ற வேண்டும்

Update: 2022-10-07 18:45 GMT

சீர்காழி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை

சீர்காழி அருகே கோவில்பத்து முதல் சூரக்காடு வரை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையை புறவழிச்சாலை வழியாக செல்லும் வாகனங்கள், மற்றும் சீர்காழியில் இருந்து பூம்புகார், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால், பெருந்தோட்டம், கீழமூவர்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றன. இந்தநிலையில் கோவில்பத்து முதல் சூரக்காடு வரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையில் முட் செடிகள் வளர்ந்து சாலையில் படர்ந்து வருகிறது.

அகற்ற வேண்டும்

இதன் காரணமாக அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் வாகனங்கள் வரும் போது வழி விடுவதற்காக சாலையில் நடந்து செல்லும் பயணிகள் முட்செடிகளால் தாக்கப்படும் நிலை உள்ளது. இதேபோல் இரண்டு வாகனங்கள் ஒன்றே ஒன்று மாறும் போது சாலையோரம் உள்ள முட்செடிகளால் வாகனத்தின் பக்கவாட்டு பகுதி சேதமடையும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் இரு புறங்களிலும் படர்ந்து கிடக்கும் முட்செடிகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்