உசிலம்பட்டி, மேலூர் பகுதியில் கண்மாய்களில் களைகட்டிய மீன்பிடி திருவிழா

உசிலம்பட்டி, மேலூர் பகுதிகளில் உள்ள கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடந்தது.

Update: 2023-04-15 21:12 GMT

உசிலம்பட்டி

உசிலம்பட்டி, மேலூர் பகுதிகளில் உள்ள கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடந்தது.

மீன்பிடி திருவிழா

உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி அருகே உள்ளது கொடிக்குளம். இந்த ஊரில் உள்ள கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. கொடிக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கொடிக்குளம், வடுகபட்டி, உடன்காட்டுபட்டி, பிரவியம்பட்டி, அகிலாண்டாபுரம் ஆகிய 5 ஊருக்கு பாத்தியப்பட்ட கொடிக்குளம் கண்மாயில் பெருமாள் கோவில், நல்லதங்காள் கோவிலில் வழிபடும் பக்தர்கள் நேர்த்தி கடனாக மீன்குஞ்சுகளை வாங்கி விடுவர். திருவிழாவை முன்னிட்டு வருடம் ஒருமுறை மீன்பிடி திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டு ஓரளவு தண்ணீர் இருந்ததால் மீன்களை பக்தர்கள் அதிக அளவில் வாங்கி விட்டனர். இதைதொடர்ந்து மீன்பிடி திருவிழா நடைபெறும் என்று அந்த கிராமங்களைச் சேர்ந்த நிர்வாக கமிட்டியினர் அறிவித்தனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று அதிகாலை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. சுற்று வட்டார கிராம மக்கள் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர். இதில் கெண்டை, கட்லா, லோகு, நெத்திலி என பல்வேறு வகையான மீன்களை பிடித்துச் சென்றனர். விழா ஏற்பாடுகளை கொடிக்குளம் பொதுமக்கள் மற்றும் கோவில் கமிட்டியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலூர்

மேலூர் அருகே திருச்சி நான்கு வழி சாலையில் உள்ள சாலக்கிபட்டி கிராமத்தில் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. சுற்றி உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கச்சா உள்ளிட்ட மீன்பிடி வலைகளை கொண்டு வந்து மீன்களை பிடித்தனர். கட்லா, கெண்டை உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் சிறிய அளவில் பிடிபட்டன.

Tags:    

மேலும் செய்திகள்