இணையதள வசதி செய்ய வேண்டும்

இணையதள வசதி செய்ய வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-30 18:26 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட கருவூலம் தொடங்கி ஓராண்டுக்கு மேலாகியும் இணைய தள இணைப்பு இல்லாமல் செயல்பட்டு வருகிறது. கருவூலப் பணிகள் அனைத்தும் கணினி மயமாகி விட்ட நிலையில், இணைய தள இணைப்பு இல்லாமல் எந்த ஒரு பணியும் கருவூலத்தில் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளது. பணியாளர்களின் கைபேசி இணைய தள இணைப்பைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாறான இணையதள இணைப்புகள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் தகவல்களை திருட வழி வகுக்கும். மேலும் கருவூலத்தில் அரசின் பணம் கையாளப்படுவதால், அரசு விரைவாகச் செயல்பட்டு இணைய தள இணைப்பை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்