சிவபெருமான் வலைவீசும் படலம் நிகழ்ச்சி
சிவபெருமான் வலைவீசும் படலம் நிகழ்ச்சி நடந்தது.
சாயல்குடி,
சாயல்குடி அருகே மாரியூர் கிராமத்தில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பவள நிற வள்ளி சமேத பூவேந்திய நாதர் கோவில் சித்ரா பவுர்ணமி திருக்கல்யாணம் மற்றும் சிவபெருமானின் 57-வது படலம் வலை வீசிய திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ராணி ராஜேஸ்வரி நாச்சியார் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் திவான், நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் சரண்யா, மாரியூர் பூவேந்தியநாதர் ஆலயம் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுகளுடன் நிகழ்ச்சி தொடங்கியது. புராணத்தில் மீனவ பெண்ணாக பிறந்த பார்வதியை, சிவபெருமான் திருமணம் செய்ய நிகழ்த்திய வலைவீசி படலம் லீலையை மையமாக வைத்து மாரியூர் கடற்கரையில் வலை வீசும் படலம் மீனவ கிராம மக்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் பவளநிறவள்ளி அம்மன் பூவேந்திய நாதர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டி மற்றும் மாரியூர், முந்தல் கடலாடி, சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.