தேசிய கைத்தறி தினத்தில் கருப்புக்கொடி ஏந்தி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆரணி அருகே சேவூரில் கைத்தறி நெசவாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி கருப்புக்கொடி ஏந்தி தேசிய கைத்றி தினத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-07 09:26 GMT

ஆரணி

ஆரணி அருகே சேவூரில் கைத்தறி நெசவாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி கருப்புக்கொடி ஏந்தி தேசிய கைத்றி தினத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ரக ஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் ரக ஒதுக்கீட்டு சட்டத்தை மீறி பல்வேறு இடங்களில் கை்தறி ரகங்கள் விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படுவதால் கைத்ணுறி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ரக ஒதுக்கீட்டு சட்டத்தை மீறி கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அரசும் எச்சரித்து வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது. ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஒன்று திரண்டு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி கட்டப்பட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடனடியாக அரசு நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வலியுறுத்தி விசைத்தறியில் பயன்படுத்தும் பட்டு சேலை ரகங்களை முறைப்படுத்தி அமல்படுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார். இதேபோல் ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் அவர்களது வீடுகளல் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்