தூத்துக்குடி மாவட்டத்தில் சமுதாயத்தில் நலிவடைந்த50 ஆயிரம் பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம்:கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் சமுதாயத்தில் நலிவடைந்த 50 ஆயிரம் பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-09 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் சமுதாயத்தில் நலிவடைந்த 50 ஆயிரம் பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுவதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஓய்வூதியம்

தமிழக அரசு, சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர்களைப் பாதுகாக்கும் வகையில் ஓய்வூதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதுமட்டும்மல்லாமல், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து நல்வாய்ப்புகளையும் உதவிகளையும் வழங்கும் அரசாக தமிழக திகழ்ந்து வருகிறது. கடந்த 10 வருடங்களாக உயர்த்தப்படாமல் இருந்த முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலம் வழங்கப்படக்கூடிய உதவித்தொகையை உயர்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி மாதாந்திர ஓய்வூதியத்தொகை ரூ.1000-த்தில் இருந்து ரூ.1200- ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்துக்கு தனியாக துறையை உருவாக்கி, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

50 ஆயிரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலம் இதுவரை 50 ஆயிரத்து 131 பயனாளிகள் மாதாந்திர ஓய்வூதியத்தொகை பெற்று பயன்பெற்று வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்