தமிழகத்தில் இந்தியை திணிக்க அனுமதிக்க மாட்டோம்

தமிழகத்தில் இந்தியை திணிக்க அனுமதிக்க மாட்டோம் என்று மாநில துணை தலைவர் ஏ.ஜி.சம்பத் கூறினார்.

Update: 2022-06-04 15:14 GMT

விழுப்புரம்:

விழுப்புரத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணை தலைவர் ஏ.ஜி.சம்பத் தலைமை தாங்கி, பேசினார். இதில் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநில செயலாளர் மீனாட்சி நித்யசுந்தர், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராமஜெயக்குமார், பாண்டியன், பொருளாளர் சுகுமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிவதியாகராஜன், நகர தலைவர் ஜெய்சங்கர், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் தாஸசத்யன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் மாநில துணை தலைவர் ஏ.ஜி.சம்பத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனுமதிக்க மாட்டோம்

இந்தியாவில் காங்கிரஸ் 50 ஆண்டுகள் ஆட்சி செய்து உள்ளது. அந்த ஆட்சியில் நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், ஆதர்ஷ் ஊழல், போபர்ஸ் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் செய்தள்ளது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் இதுவரை ஊழல் நடக்கவில்லை.

புதிய கல்விக்கொள்கை திட்டத்தின் மூலம் பா.ஜ.க. இருமொழி கொள்கையை நிலைநாட்டுகிறது என்று கூறுகிறார்கள். தமிழகத்தில் எந்த மொழியையும் பிரிப்பதற்கு தமிழக பா.ஜ.க. அனுமதிக்காது. குறிப்பாக தமிழகத்தில் இந்தியை திணிக்க அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்